BBrother Agency
வழிகாட்டி

நகைக் கடனுக்கான அடகுக் கடை மென்பொருள், தமிழிலும் ஆங்கிலத்திலும்

அடகுக் கடை அல்லது நகைக் கடன் தொழில் நடத்துகிறீர்களா? ஒவ்வொரு கடன், ஒவ்வொரு தவணை, ஒவ்வொரு நாள் பணம் எல்லாவற்றையும் FinCore ஒரே இடத்தில் வைத்திருக்கும்; நோட்டுப் புத்தகத்தில் கணக்கிட வேண்டியதில்லை.

அடகுக் கடைக்கு மென்பொருளிடம் தேவை

  • ஒரு நிமிடத்துக்குள் கடன் பதிவு: வாடிக்கையாளர், நகையின் photo, எடை, தரம், அசல், வட்டி விகிதம்.
  • கடன் தேதியிலிருந்து வட்டி தானாகக் கணக்காகும்; "இன்று எவ்வளவு?" என்று கேட்டவுடன் பதில் கிடைக்கும்.
  • பகுதி செலுத்தல், கூடுதல் கடன், புதுப்பித்தல், நகை திருப்புதல் எல்லாம் அந்தக் கடனிலேயே பதிவாகும்; ரசீது அச்சிடலாம்.
  • அடகு வைத்த நகைகளுக்கு bankers-இடம் வாங்கும் பணமும் அதன் வட்டியும் தனியாகப் பதிவாகும்.

மூடும் day book

  • உள்ளே வெளியே போகும் ஒவ்வொரு ரூபாயும் cash book-இல் பதிவாகும். இரவு நாளை மூடிவிட்டால், மூடிய நாளை தவறுதலாக மாற்ற முடியாது.
  • தவணை வந்த கடன்கள், காலம் கடந்த கடன்கள், ஈட்டிய வட்டி, கையிருப்பு ஆகியவற்றை reports காட்டும்.

தமிழ்நாட்டுக் கடைகள் செயல்படும் விதத்தில்

  • திரைகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் உள்ளன; எப்போது வேண்டுமானாலும் மாற்றலாம். ஊழியர்களுக்கு கவுண்டர் வேலை மட்டும் கொடுத்து, கடையின் பணத்தை உரிமையாளர் பார்வைக்கு வைக்கலாம்.
  • உங்கள் சொந்த Windows PC-யிலேயே ஓடும்; இணையம் மெதுவாக இருந்தாலும் கடன் பதிவு நிற்காது. கைப்பேசிக்கு Android app-உம் உண்டு.
கேள்விகள்

கடை உரிமையாளர்கள் கேட்பவை

அடகுக் கடை மென்பொருளுக்கு இலவச trial உண்டா?

உண்டு. Download பக்கத்தில் demo கேளுங்கள்; எல்லா வசதிகளுடன் 7 நாள் உரிமம் கிடைக்கும்.

என் கடையில் நிறுவித் தருவீர்களா?

ஆம். நிறுவி, உங்களோடு அமைத்து, ஊழியர்களுக்குப் பயிற்சி தருவோம். நாங்கள் கடலூரில் இருக்கிறோம்.